Thursday, April 7, 2011

**  அக்குபங்க்ச்சர் சிகிச்சை என்றால் என்ன?


அக்குபங்க்ச்சர் என்பது மயிரிழையைக் காட்டிலும் மிக மெல்லிய ஊசி அல்லது கை விரல் கொண்டு தோளின் மேல் பகுதியில் தொடுவதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களைக் களையக்கூடிய மருத்துவ முறையாகும். இம்முறை எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 

நம் உடலின் உள்ளுறுப்புகளின் சக்தி ஓட்டப்பாதையில் உள்ள தேக்கம் அல்லது குறைபாடே நோயாகும். அக்குபங்க்ச்சர் நாடிப் பரிசோதனை மூலம் ஓட்ட குறைபாட்டின் மையத்தை அறிந்து, அதனை சரி செய்யக்கூடிய அக்குபங்க்ச்சர் புள்ளியினை தொடுவதன் மூலம் நோய் களையப்படுகிறது.

** அக்குபங்க்ச்சர் முறையில் உடலில் நிறைய ஊசிகளைச் செருகி, அவற்றில் மின்சாரம் செலுத்தப்படும் என்று கூறுகிறார்களே?

அக்குபங்க்ச்சர் சிகிச்சை என்பது ஒன்றிரண்டு புள்ளிகளில் ஊசியாலோ அல்லது கையாலோ தொட்டு சிகிச்சையளிப்பது மட்டும் தான். இன்னும் சொல்வதானால், வெறும் கையால் தொட்டு சிகிச்சையளிப்பது தான் உண்மையான அக்குபங்க்ச்சர். ஏனென்றால், அக்குபன்க்ச்சரின் துவக்க காலத்தில் ஊசி போன்ற உலோகங்களே கண்டுபிடிக்கப்படவில்லை.

அக்குபங்க்ச்சர் சீனாவில் இருந்து பிற நாடுகளுக்குப் பரவியபோது, அந்தந்த பகுதிகளின் தன்மைக்கேற்ப மாறுதல்கள் உருவாயின. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இம்முறை பரவிய பின்பு வணிகமயமாக்கப்பட்டது. நோயாளியிடம் பணம் பறிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையும் பின்பற்றப்பட்டது. அதன் விளைவுகள் தான் - மின்தூண்டல் சாதனங்கள் (Electric Stimulators ), சக்தி அளவு பரிசோதனைக்கருவி, (Computer Meridian Diagnosis ), துணை உணவுகள் (Supplementary Foods) எனும் மருந்துகள், இரத்த ஓட்டத்தை சீரமைக்கும் கருவி (Blood Circulative Massagers) போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

இவற்றுக்கும் அக்குபன்க்ச்சருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை,

**  தினம் தினம் சிகிச்சை செய்வீர்களா?

தேவையில்லை. 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை சிகிச்சை செய்வது நோயிளிரிந்து விரைவாக குணமடைய வழி வகுக்கும்.


**  கண்டிப்பாக 7 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அவசியம் தவறாமல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா? ஏதேனும் சந்தர்ப்பத்தால் ஒருமுறை அல்லது இருமுறை சிகிச்சை எடுத்துக்கொள்ள தவறிவிட்டால் நோயிலிருந்து பலன் பெற முடியாமல் போய்விடுமா?

ஒவ்வொருமுறை செய்யப்படும் சிகிச்சையும் நீங்கள் நோயிலிந்து விடுபட வழிவகுக்கிறது. ஓரிருமுறை சந்தர்ப்ப சூழ்நிலையில் சிகிச்சை தவறிவிடுவதால் ஏற்கனவே பார்த்த சிகிச்சையின் பலன் குறைந்துவிடாது. விடுபட்ட சிகிச்சையிலிருந்து தொடர்ந்து சிகிச்சை செய்து கொள்ளலாம்.



**  சுமார் எத்தனை நாளில் குணம் தெரியும்?

சிலருக்கு ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே குணம் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு நான்கு, ஐந்து வாரங்கள் கழித்து திடீரென மாறுதல்கள் தெரிய ஆரம்பிக்கும்.


**  ஒருமுறை சிகிச்சை செய்தால் அது எத்தனை நாட்களுக்கு வேலை செய்யும்?

உடலில் உள்ள நோய்களுக்கு ஏற்றவாறு ஒருமுறை சிகிச்சை செய்வதன் மூலம் பூரணகுணம் அடைபவர்களும் உண்டு. ஒரு சிலருக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அத்துடன் நின்றுவிடும். மேலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் அடுத்த சிகிச்சையை தொடர்வது நல்லது.


**  ஒரு நோய்க்கு அக்குபங்க்ச்சர் முறையில் சிகிச்சை முடிய எத்தனை நாட்களாகும்? 

ஓரிரு சிகிச்சைக்கு பிறகு நோயின் தீவிரத்திலிருந்து நீங்கள் விடுபடுவதை உணருவீர்கள். தொடர்ந்து உடல் தொந்தரவுகள் சீராகும் வரை சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும். எல்லா நோயாளிகளின் உடலும் ஒரே மாதிரியாக இருக்காது. அவரவர் உடலின் தன்மையைப் பொறுத்து, சிகிச்சைக்கான காலம் மாறுபடும். நோயிலிருந்து குணமடைவது நிச்சயம்.